
மத்திய அரசாங்கம் 1992க்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் பங்கு உள்ளதா? என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இ.எம்.அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். பாப்புலர்ஃப்ரண்ட் கடந்த சில வருடங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் இன்னும் இவ்வழக்கில் ஏற்கெனவே போலியாக சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை இன்னும் திரும்பப்பெறவுமில்லை. அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியே விடவுமில்லை என்பது வருந்தத்தக்கது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பதை விட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை முன்பே முயற்சி செய்திருந்தால் தொடர்ச்சியாக நடைபெற்ற தீவிரவாத செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும்.அதனால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் சமூக மற்றும் தேசத்தின் நலன்கருதி ஆர்.எஸ்.எஸ்ன் ஷாகா வகுப்புகள் மற்றும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக