இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 30 ஜூலை, 2011
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?
ஐம்பதிலும் வளையுமா? ஐம்பதில் வளைந்தவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று ஒரு சிலரைப் பார்த்து தங்கள் குழந்தைகளுக்குத் தொழுகையை ஏவும் விஷயத்தில் பெற்றோர்கள் நாட்களை தள்ளிப் போடுகின்றனர். அவர்கள் பார்க்கும் ஐம்பதில் வளைந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வால் வளைக்கப்பட்டவர்கள் என்பதைக் காணத் தவறி விடுகின்றனர். மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ் தனது இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருப்பதால் அவன் நாடும்பொழுது தனது வல்லமையை நிலைநாட்டுவதற்காக இனி தேராது என்று கைவிடப்பட்டவருடைய உள்ளத்தையும் புரட்டி நேர்வழியில் செலுத்தி அவரை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களில் ஒருவராகவும் ஆக்கி விடுவான்.
படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பூமியில் உண்டு என்றுக் கூறுவதைப் போல் படிக்காதவர்களில் ஆயிரத்தில் சிலரை படித்தப் பண்டிதர்களுக்கு நிகரானவர்களாக உருவாக்குவது இறைவனின் வல்லமையில் உள்ளது.
சர்வ வல்லமைப் படைத்த உலக அதிபதி அல்லாஹ் தனது வல்லமையிலிருந்து சிறிதளவை ஏனும் கூட உலகில் உள்ள எவருக்கும் வழங்கவில்லை என்பதால் நம்முடையப் பிள்ளைகள் வளர்ந்து
தீமையை உள்ளத்தில் புகுத்திக்கொண்டு வழிகெட்டப் பின் அவர்களை நேர்வழியில் செலுத்த நினைப்பது நமக்கு முடியாதக் காரியாகி விடும். அல்லாஹ் அவனை தட்டழிந்து கெட்டலைய விட்டு விட்டால் நம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காருவதைத் தவிற வேறெதுவும் செய்ய இயலாது. அதனால் நமக்கு விதியாக்கப்பட்ட உள்ளத்தில் பதியும் சிறுப் பிராயத்தில் குழந்தைகளுக்கு தொழுகையைப் புகுத்தி விடவேண்டும்.
தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் நமது கடமை முடிந்தது என்றில்லாமல் குழந்தைகள் தொழுகையாளிகளாக ஆவதற்கு வல்லோன் அல்லாஹ்விடம் பெற்றோர்களாகிய நாமும் பிரார்த்திக்க வேண்டும். இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் இறைவனின் உத்தரவின்படி தன் மனைவி, பிள்ளையை வனாந்திரத்தில் விட்டுத் திரும்பும் பொழுது அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதற்காக இறைவனினிடம் பிரார்த்தித்தது சான்றாகும். இன்ன இடத்தில் விட்டுத் திரும்பி விட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவாக இருந்ததால் அவர் அங்கிருந்து திரும்பியதும் அவர்களுக்கு இறைவன் பொறுப்பாளியாகி விடுகிறான்.
அவர்களுக்கு இப்பொழுது என்னத் தேவைப்படும் ? எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் ? என்பதை தன்னை விட தனக்கு உத்தரவிட்ட இறைவனுக்கு நன்குத்தெரியும் என்பதை இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் நன்றாக அறிந்துகொண்டே அங்கிருந்து வெளியாகி சற்று மறைந்தப் பின்னர் தனது மனைவிப் பிள்ளைக்கு நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை தன்னுடைய அறிவுக்கு எட்டும்வரை இறைவனிடம் பட்டியலிட்டுக்கேட்டார்கள்.
14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற் கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்து விட்டுத் திரும்பினார்கள்.
இந்தப் பிரார்த்தனையை செவியுற்ற அல்லாஹ் இதை அதிகப் பிரசங்கித்தனம் என்றுக்கூறவில்லை என்னுடையப் பொறுப்பில் விட்டவர்களுக்கு என்ன தேவைப்படும் என்று எனக்குத் தெரியாதா ? நீ பட்டியிலிட்டால் தான் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியாத தெல்லாம் எனக்குத் தெரியும் என்று கோபப்பட்டு பதிலளிக்கவில்லை மாறாக அவர்கள் பட்டியலிட்ட தொழுகை, சகோரத்துவம், உணவுப் போன்ற மூன்று அம்சங்களையும் குறைவின்றியே நிறைவேற்றிக் கொடுத்தான். இதன் மூலமாக நம் உள்ளம் நாடும் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை நமது நாவு; வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை இறைவனிடம் பெறவேண்டும்.
நம்முடைய குழந்தைகள் ஸாலிஹான குழந்தைகளாக வளரவேண்டும் என்று நினைத்தால் தொழுகையை குழந்தைப் பருவத்தில் புகுத்தவதுடன் புகுத்தியத் தொழுகை உள்ளத்திலிருந்து வெளியேறாமல் நிலை கொள்வதற்காகவும் அவர்களின் எதிர்கால தேவைகளாகிய உணவும், பிற மனிதர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டு சகோதர வாஞ்சையுடன் வாழ்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
தொழுவார், சகோதரத்துவம் இருக்காது, தொழுகையும் சகோதரத்தவமும் இருக்கும், பொருளாதாரம் இருக்காது பொருளாதாரத்தைத் தேடும் பொழுது சறுக்கிடுவார். இப்படி எதாவது ஒன்று அமைந்தால் மற்றொன்று அமையாததைப் பார்க்கிறோம். மூன்றும் ஒருங்கே அமையப் பெறவேண்டும் என்றால் குழந்தைகளை சிறுப்பிராயமாக இருக்கும் பொழுது மூன்றுக்கும் முதன்மையானதான தொழுகையைப் புகுத்துவதுடன் அவர்களது இதரத் தேவைகளை இறைவனினடம் பெற்றோர் கேட்க வேண்டும். மூன்றும் ஒருவருக்கு ஒருங்கே அமையப் பெற்று விட்டால் அவரின் சுவனத்தை தடை செய்ய எவராலும், எந்த சக்தியாலும் முடியாது.
இஸ்லாம் வந்தது மனித சமுதாயத்தை வழிகேட்டிலிருந்து நேர்வழியில் செலுத்துவதற்காகத் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆன் - நபிமொழி நெடுகிலும் காணப்படுவதைப் பார்க்கிறோம் அதில் ஒன்று தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடும் பிரார்த்;தனை மிகப் பெரிய சான்றாகும்.
ஏன் என்றால் ? அந்த தாம்பத்தியத்தின் மூலமாகவே குழந்தைப் பாக்கியம் அருளப்படுவதால் அங்கு ஷைத்தான் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்திலும் இறைவனின் பாதுகாவல் கொண்டு ஷைத்தானை விரட்டுவதற்காக
بِسْمِ اللَّهِ , اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ , وَجَنِّبِ الْشّيْطَانَ مَا رَزَقْتَنَا
பிஸ்மில்லாஹி, அல்லாஹூம்ம ஜன்னிப்னாஷ் ஷைத்தான, வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஜக்தனா - உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன் 'அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறி நெருங்குகிறேன். 'இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப்போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி : 141ஃ138.
நல்லதை தெரிந்துக் கொள்வதில் இஸ்லாம் நாணத்தைப் பேணச் சொல்லவில்லை, தீமையைத் தெரிந்து கொள்வதில் இஸ்லாம் வெட்கப் படச்சொன்னது.ஷைத்தான் ஒருவரை நெருங்குவதால் அவரது பொருளாதாரத்தை சரித்திடுவதில்லை, அல்லது அவரது பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதில்லை ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் வெறுக்கிறான் என்பதை அறிந்திருந்த ஷைத்தான் ஒழுக்கக்கேட்டைத் தூண்டி இறைவளை வணங்கும் சிந்தனையை மாற்றி விடுவதைத் தவிற வேறெதுவும் அவனால் செய்ய இயலாது.
ஒழுக்கங் கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் கோபம் கொள்கிறான் என்பதற்கு நூஹ் (அலை) அவர்களின் மகனை அவர்களின் கண் முன்னே அலை ஒன்றை அனுப்பி அடித்;து சென்றப் பிறகு அதைக் கண்ணுற்ற நூஹ்(அலை)அவர்கள் மனம் உடைந்து இறiவா ! இவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா ? என்று ஆதங்கத்துடன் கேட்டதற்கு அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல என்றுக்கூறி விட்டு அதற்கு அவன் ஒழுக்கங்கெட்டவன் என்ற பதிலை அல்லாஹ் அளித்தான்.
ஏகஇறைவனை மறுத்த மகனை, ஒழுக்கங்கெட்ட செயல்களில் மூழ்கித் திளைத்த மகனை கண்முன்னே நிகழ்ந்த இறைவனின் கோபத்திலிருந்து நபியாக இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. உலகில் இப்படி என்றால்? மறுமையில் இதை விட கடுமையானதாக இருக்கும். தந்தையின் கண் முன்னே மகனும், மகனின் கண் முன்னே தந்தையும் சித்ரவதை செய்யப் படுவார்கள்.
ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை தெளிவாகவே அங்கு அறியவேச் செய்வார்கள் என்பதற்கு இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் தன் தந்தையின் நிலையைக் கண்டு தவித்து இறைவனிடம் இறiவா ! மறுமையில் என்னை கண்ணியப்படுத்துவதாக நீ அளித்த வாக்குறி அளித்திருந்தாய் !
நான் மட்டும் கண்ணியமடைந்து நரகில் என் தந்தை சித்ரவதைப் படும்போது அதை என்னால் சகிக்க முடியாது என் தந்தையை மன்னித்து அவருக்கு கண்ணியத்தை வழங்கு என்றுக் கேட்க அதை இறைவன் மறுத்து அவருடைய கண் முன்பாகவே உருவத்தை மாற்றி நரகில் வீசப் பட்டது தெளிவான ஆதரமாகும்.
உலகில் மகனக்குத் தலைவலி என்றாலே தாங்கிக் கொள்ள முடியாத தாய்,தந்தையால் மறுமையில் மகனை நெருப்பால் பொசுக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியுமா ? இறுதித் தீர்ப்பு நாளின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளருவதற்காக தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் இறைவனிடம் அவர்களின் உலக – மறுமைத் தேவைகளைப் பிரார்த்திக்க வேண்டும்.
பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்தெடுத்தாலர் அது இம்மை- மறுமையில் அவர்களுக்கு மட்டும் நலவாக அமையாது, மாறாக வளர்த்தெடுக்கும் பெற்றோருக்கும் நலவாக அமைந்து விடும் வயதான காலத்தில் அன்புடனும், பரிவுடனும் பராமரிப்பார்கள், மரணித்தப் பின்னரும் கப்ரு வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும் இறைவனிடம் உள்ளம் உருகி பிரார்த்திப்பார்கள். உலகில் நற்செயல்கள் புரிந்து ஒரு மலை அளவு நன்மைகளை குவித்திருந்தாலும் மரணித்தப் பின்னர் அவர்களின் ஒழுக்கமுள்ளப் பிள்ளைகள் அவர்களுக்காக கேட்கும் துஆ மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளைப் போல் குவியக் கூடியதாக அமைந்து விடும்.
மரணத்திற்குப் பின் தன்னை ஈன்ற தாய் தந்தையரின் மறுமை வாழ்வுக்காக பிள்ளைகள் பிரார்த்திக்க வேண்டும் என்பதை அறியாமலே எத்தனையோப் பிள்ளைகள் இருக்கின்றனர் அதற்கும் காரணம் தாய், தந்தையர் தான் தொழுகையை சிறுப் பிராயத்தில் அவர்களுக்குப் புகுத்தி விட்டால் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்;ள நற்செயல்களை சிறிது,சிறிதாக கற்றறிந்து கொள்வார்கள். தாய், தந்தையார் குழந்தைகளுக்கு ஏவுவது கடமை நூஹ் நபி(அலை) அவர்களின் மகனைப்போல் ஏற்றுக் கொள்ளத் தவறி வழிக்கெட்டால் அதற்கு தாய், தந்தை பொறுப்பாகி விடமுடியாது. தொழுகையை ஏவ வேண்டும், அந்தத் தொழுகை உள்ளத்தில் பதிய இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
நன்றி : அதிரை பாரூக். (மின்மடல் வழியாக வந்த செய்தி).
திங்கள், 27 டிசம்பர், 2010
இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள் யாவை?
பத்து விசயங்கள் ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடுகின்றன. அவை பின்வருமாறு :-1. பலதெய்வ வழிபாடு. (இணைவைத்தல்).
2. பலதெய்வ வழிபாடு செய்பவர்களை நிராகரிப்போர் என நம்பாமலிருத்தல். அல்லது அவர்களின் பலதெய்வக்கொள்கை சரியாகஇருக்குமோ என சந்தேகித்தல்.
3. தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் தம்தேவைகளை நிறைவேற்றப் பிரார்த்தனை புரிந்துகொண்டு அல்லாஹ்விடம் தமக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுதல்.
4. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைவிட பிறருடைய வழிகாட்டுதலை சிறந்தது என நம்புதல்.
5. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் வெறுத்தல்.
6. நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்க மறுத்தல். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நற்கூலியைப்பற்றியும் , அதைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் பரிகாசம் செய்தல்.
7. சூனியம் செய்தல்.
8. முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல்.
9. மூஸா (அலை) அவர்களின் சட்டங்களுக்கு உட்படாது கிள்ரு(அலை) விதிவிலக்காக இருந்ததைப்போல் நம்முடைய ஷரீஅத்தை பின்பற்றி நடப்பதிலும் நம்மில் சிலருக்கு விதி விலக்கு உண்டு என்று நம்புதல்.
10. அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளாமலும், அதை நடைமுறையில் பின்பற்றாமலும் விலகிச்செல்லுதல்.
செவ்வாய், 14 டிசம்பர், 2010
பல தெய்வங்கள் கடவுளா...? கடவுள்களா ?
ஓரிறையின் நற்பெயரால்ஓரிறை கொள்கை பற்றி பழைய கிரகந்தங்களில் மிக தெளிவாக குறிப்பிடபட்டிருந்தும் பல தெய்வ (வழிபாட்டுக்) கொள்கையையே தூக்கி பிடிப்பற்கான ஆதாரம் (காரணம்) என்ன ?
தன் உயர்வான பண்புகளைக் குறித்து இறைவனே நன்கறிவான். அதனை வேதவெளிப்பாடுகளின் மூலம் மனிதனுக்கு அறிவித்துக் கொடுத்தான். ஆனாலும் முந்தைய வேதங்களில் மக்கள் தங்கள் விருப்பப்படி கருத்துக்ளைப் புகுத்திய போது, வேதங்கள் வர்ணித்த இறைவனின் தன்மையிலும் களங்கம் ஏற்பட்டு விட்டது. உதாரணமாக உபநிஷத்துக்கள் கூறும் செய்தி.
'அவனுக்கு இணையானக உலகில் ஒன்றும் இல்லை. அவனைக் காண்பதற்கான அடையாளங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவான அவனுக்குக் காரணமானவன் எவனும் இல்லை. அவனைப் படைத்தவனோ அவனுக்கு அதிபதியோ எவரும் இல்லை'' (சுவேதாதரோபநிஷத் 6:5)
''அவனுக்கு முன் சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் பிரகாசிப்பதில்லை'' (முண்டகோபநிஷத் 2:2:11)
''அவன் மகாத்மா, காணுதற்கரியவன்'' (பகவத்கீதை 7:19)
''இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'' (அதர்வவேதம் 323)
மேற்கண்டவாறெல்லாம் இந்து மத வேதங்கள் கூறுவதிலிருந்து முன்னால் அருளப்பட்ட வேத வசனங்களின் தாக்கம் அதில் உள்ளது என்பதை தெளிவாக்குகிறது. எனினும் மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வேதங்களில் கையூடல்களைச் செய்த போது பல தெய்வக் கொள்கையும் அதில் இடம் பெற்று இன்றளவும் இறைவனுக்கு பல்வேறு உருவங்களைக் கற்பித்து வணங்கி வருகின்றனர் இந்துக்கள்.
இன்னும்
நான் சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதியாகமம் 17:11)
பூமியில் ஒருவரையும் பிதா என்று கூறாதீர்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார் (மத்தேயு 23:9)
இஸ்ரவேலே கேள்! நம்முடைய கடவுளாகிய கர்த்தர் ஒருரே கர்த்தர் (மாற்கு 12:29)
மேற்கண்ட பைபிளின் வரிகள் முன்னால் அருளப்பட்ட வேதங்களின் தாக்கம் அதில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. எனினும் மனிதக் கற்பனைகளின் இடைச் செருகலால் இறைவன் மூன்று என்றும் அவன் மனிதனின் சாயலை உடையவன் என்றும் மனிதராகிய இயேசு கடவுள் என்றெல்லாம் வர்ணித்து உருவ வழிபாட்டைச் செய்து வருகின்றனர் இன்றைய கிறித்தவர்கள். திருக்குர்ஆன் இறைவன் அருளிய இறுதி வேதமாக உள்ளது. அது கூறும் கடவுள் கொள்கை தெளிவானது. முரண்பாடுகளற்றது. பகுத்தறிவுக்குப் பொருத்தமானது. இறைவன் என்பவன் உருவமற்ற ஒரு மாயை என்ற அத்வைத சித்தாந்தத்தை அது கூறவில்லை. இறைவனுக்கு உருவமே இல்லை எனில் அவன் ஒன்றுமே இல்லை என்றாகி விடும். இறைவனுக்கு உருவம் இல்லை என்று கூறுபவர்கள் இறைவனே இல்லை என்ற நாத்திக சித்தாந்தத்தின் பாலே வழிகாட்டுகின்றனர். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ் என்பவன் தனக்கே உரிய பண்புகளால் உயர்ந்தவன். அவனுக்கு உள்ளமை உண்டு. ஆனால் அதனை சிற்றறிவு கொண்ட மனிதனால் வர்ணிக்க இயலாது. அவன் ஒப்புவமையற்றவன். மேற்கோளுக்காக மட்டும் சில வசனங்களைக் குறிப்பிடுகிறேன்.
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (திருக்குர்ஆன் 2:255)
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அலன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (திருக்குர்ஆன் 42:11)
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை . (திருக்குர்ஆன் 114)
இதுகுறித்து மேலும் விளக்கங்கள் அறிய .
http://www.islamkalvi.com/general/allah_part2.htm
புதன், 11 ஆகஸ்ட், 2010
மறைவான வணக்கம்
இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

