வெள்ளி, 27 ஜனவரி, 2012

தமிழக முஸ்லிம்களின் போர் வாள்!

ஜனவரி :28, சகோதரா! வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது நீயாக இரு! நான் வெட்டப்பட்டாலும் இறைப்பாதையில் கொல்லப்பட்டாலும் உன் சமுதாய பணிகள்  தொடரட்டும். நான் உங்களோடு இல்லை என்றாலும் அல்லாஹ் உங்களோடு இருக்கிறான். - அல்ஹாஜ் பழனி பாபா


இன்று (28.01.2011) சமுதாயப்போராளி பழனிபாபா
சஹீதான வீரமரணம் அடைந்த  நாள். அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.

வியாழன், 26 ஜனவரி, 2012

ரத்தம் கொடுக்கும் முஸ்லிம்கள்! ரத்தம் குடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!

63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக இயக்கத்தின் வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மக்கள் இரத்ததானம் செய்தார்கள்.

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினமான இன்று (26-1-2012) ரியாதில் மாபெரும் இரத்த தான முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டல கிளை நடத்தியது. இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாட்டின் முஸ்லிம்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது.

திங்கள், 23 ஜனவரி, 2012

பாலஸ்தீன மக்களின் கண்ணீர் வரலாறு!

கடந்த 2010 டிசம்பர் 2 ஆம் தேதி தில்லியிலிருந்து பாகிஸ்கிதான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும், ஏறக்குறைய 8,000.கி.மீ. பயணித்து காஸா சென்ற இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் ஆ.முத்துக்கிருஷ்னன் மட்டுமே. காஸாவில் அவர் கண்ட காட்சிகளையும், அங்கு மக்கள் படும் துயரங்களையும், அரசியல் நிலைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.