வியாழன், 26 ஜனவரி, 2012

ரத்தம் கொடுக்கும் முஸ்லிம்கள்! ரத்தம் குடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!

63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக இயக்கத்தின் வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மக்கள் இரத்ததானம் செய்தார்கள்.

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினமான இன்று (26-1-2012) ரியாதில் மாபெரும் இரத்த தான முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டல கிளை நடத்தியது. இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாட்டின் முஸ்லிம்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது.



முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தின் போதும் தங்கள் விகிதாசாரத்துக்கு அதிகமாக தங்கள் இரத்தங்களை சிந்தி பாடுபட்டார்கள். இப்போதும் தொடர்ந்து தங்கள் இரத்தங்களை கொடுத்து பொதுவாழ்வில் தங்களை யாரும் மிஞ்சியவர்கள் இல்லை என்பதை நிருபித்து உள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். பாசிச பயங்கரவாதிகளோ சுதந்திர போராட்டத்தின் போது நமது சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையனுக்கு காட்டி கொடுத்தார்கள். இன்றும் முஸ்லிம்களை கொன்று அவர்கள் இரத்தங்களை மண்ணிலே ஓட்டுகின்றனர். ஒரு இனம் இரத்தம் கொடுத்து மக்களை வாழவைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டமோ இரத்தத்தை குடித்து மக்களை கொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக