திங்கள், 28 நவம்பர், 2011
சனி, 30 ஜூலை, 2011
புதன், 27 ஜூலை, 2011
திங்கள், 18 ஜூலை, 2011
பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.
வெள்ளி, 18 மார்ச், 2011
இந்திய அரசாங்கத்தின் ஓரவஞ்சனை நடவடிக்கை !!!

இந்த இந்துவா துரோகிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, என்னவோ ஹஜ் யாத்திரிகர்களுக்கு மட்டும்தான் மானியம் வழங்கப்படுவாதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இந்துக்களுக்கும் இது போல் அவர்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல மத்திய மாநில அரசுகள் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்கின்றன. இந்து யாத்திரிகர்களுக்கு கர்நாடகா மாநில 2010 பட்ஜெட்டில் ரூ 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
1. மானசரோவர் செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.3கோடி
2. திருப்பதி செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி
3. சபரிமலை செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி
இது போல பல மாநிலங்களிலும் பல கோடி ருபாய்கள் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப்படுகின்றது. தமிழக அரசு இந்த ஆண்டு 2011 பட்ஜெட்டில் இந்து கோயில்களுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் முஸ்லீம்களுக்கு சொத்த பணத்தில் பள்ளிவாசல் கட்ட கூட அனுமதி தருவதில்லை தமிழக அரசு. இந்து யாத்திரிகர்களுக்கு இந்தியன் ரயில்வே துறையின் சலுகைகள்
மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறை இந்துக்கள் தங்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல பல்வேறு வகையான சலுகைகளை அறிவிக்கின்றது. நாம் ஆராய்ந்த வரை முஸ்லீம்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ இப்படி இந்தியன் ரயில்வே சலுகைகள் அறிவிப்பது கிடையாது. இந்துக்களின் புன்னிய ஸ்தலங்களுக்கு செல்ல பல் வேறு வகையான திட்டங்களில் மொத்த ரயில் கட்டணத்தில் 20 % வரை சலுகை அளிக்கின்றது.
உதாரணத்திற்க்கு " "Bharat Darshan Special Tourist Train" இது HYDERABAD - HARIDWAR - RISHIKESH - VARANASI - KOLKOTTA - PURI - KONARK - BHUBANESHWAR . ஆகிய இடங்களில் உள்ள 12 கோயில்களுக்கு செல்கின்றது. 14 நாள்களுக்கு ஒரு நபருக்கு ரூ.7695 வாங்குகின்றனர். இரயில் கட்டணம், உணவு , தங்கும் வசதி, இரயில் அல்லாமல் கோயில்களுக்கு சென்றுவர பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்தும் சேர்த்து இந்த தொகை. இதை ஆராய்ந்தால் இரயில் கட்டணத்தில் 20 % சலுகை வருகின்றது
தற்போது இந்துக்களின் புன்னிய ஸ்லத்திற்க்கு செல்ல 4 திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஆனால் முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ எந்த சலுகை திட்டமும் இல்லை. இன்னும் கோயில்களின் பக்தர்களுக்கு பல்வேரு சலுகைகளை அரசு வழங்கிவருகின்றது. நிலைமை இப்படி இருக்க ஹஜ் பயனிகளுக்கு மட்டுமே அரசு மானியம் தருவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை முஸ்லீம் அல்லாதோர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.
புதன், 16 மார்ச், 2011
இஸ்லாமிய பார்வையில் சுனாமியும் படிப்பினையும் !!!

ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம்
கூறுகின்றது.
பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது.
சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது. இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமையாகத் தடுக்கப்படு கின்றதோ அந்த இடத்துக்குநிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது' அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற் பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.
தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப் பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.
சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு பனை மரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனை மர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன.
மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல்நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரைக்கு அருகில் கடல் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்ட மான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனை மர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்று கண்டு பிடித்தனர்.ஆழ் கடலுக்கு உள்ளேயும் பேரலை கள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டு களுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.
கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு!!

இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.
1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.
இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதியாக இருந்தது. 1946ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது.
பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம். காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.
திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.
முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்! 1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.
1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது. 1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.
காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படு வதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத். ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற் காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.
இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள். “சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது.
அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன.
இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”
என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.
மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமை யை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது. ‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான் முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.
மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது. தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.
திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார். இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?
கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.
1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கிய மானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.
கருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம். எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.
இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?
இன்ஷா அல்லாஹ் தொடரும்...நன்றி : ப.அப்துல் சமது
சனி, 12 பிப்ரவரி, 2011
யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்!!!

இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700 களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760 களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.
1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார். யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)
ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.
அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும். அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.
`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார். அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை. இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.
அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார். அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”! இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம். பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்: ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின் முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.
இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும் சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.
ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும் இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. வர்த்தகச் சூதாட்டம்: அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.
2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.
இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.
3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமா
கவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?
என்ன செய்வது?: உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். எதிர்கால இளம் தலை முறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும். தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும். மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்! உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!
உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்
இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்; இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே. உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம். யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.
1. டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.
2. ராண்டம் – செய்தி நிறுவனம்
3. ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்
4. ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.
5. ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.
உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.
சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்:
1. ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.
2. மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.
3. மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.
4. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.
5. யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.
இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில்: யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
1. ABC மற்றும் NBC குழுமம் 2. MTV குழுமம் 3. பாக்ஸ் குழுமம்
இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்
வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே.
அலாவுத்தீன் இம்தாதி
புதன், 9 பிப்ரவரி, 2011
மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு அவசர வேண்டுகோள்!!

தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது.
எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜுமஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?

மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ் தனது இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருப்பதால் அவன் நாடும்பொழுது தனது வல்லமையை நிலைநாட்டுவதற்காக இனி தேராது என்று கைவிடப்பட்டவருடைய உள்ளத்தையும் புரட்டி நேர்வழியில் செலுத்தி அவரை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களில் ஒருவராகவும் ஆக்கி விடுவான்.
படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பூமியில் உண்டு என்றுக் கூறுவதைப் போல் படிக்காதவர்களில் ஆயிரத்தில் சிலரை படித்தப் பண்டிதர்களுக்கு நிகரானவர்களாக உருவாக்குவது இறைவனின் வல்லமையில் உள்ளது.
சர்வ வல்லமைப் படைத்த உலக அதிபதி அல்லாஹ் தனது வல்லமையிலிருந்து சிறிதளவை ஏனும் கூட உலகில் உள்ள எவருக்கும் வழங்கவில்லை என்பதால் நம்முடையப் பிள்ளைகள் வளர்ந்து
தீமையை உள்ளத்தில் புகுத்திக்கொண்டு வழிகெட்டப் பின் அவர்களை நேர்வழியில் செலுத்த நினைப்பது நமக்கு முடியாதக் காரியாகி விடும். அல்லாஹ் அவனை தட்டழிந்து கெட்டலைய விட்டு விட்டால் நம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காருவதைத் தவிற வேறெதுவும் செய்ய இயலாது. அதனால் நமக்கு விதியாக்கப்பட்ட உள்ளத்தில் பதியும் சிறுப் பிராயத்தில் குழந்தைகளுக்கு தொழுகையைப் புகுத்தி விடவேண்டும்.
தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் நமது கடமை முடிந்தது என்றில்லாமல் குழந்தைகள் தொழுகையாளிகளாக ஆவதற்கு வல்லோன் அல்லாஹ்விடம் பெற்றோர்களாகிய நாமும் பிரார்த்திக்க வேண்டும். இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் இறைவனின் உத்தரவின்படி தன் மனைவி, பிள்ளையை வனாந்திரத்தில் விட்டுத் திரும்பும் பொழுது அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதற்காக இறைவனினிடம் பிரார்த்தித்தது சான்றாகும். இன்ன இடத்தில் விட்டுத் திரும்பி விட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவாக இருந்ததால் அவர் அங்கிருந்து திரும்பியதும் அவர்களுக்கு இறைவன் பொறுப்பாளியாகி விடுகிறான்.
அவர்களுக்கு இப்பொழுது என்னத் தேவைப்படும் ? எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் ? என்பதை தன்னை விட தனக்கு உத்தரவிட்ட இறைவனுக்கு நன்குத்தெரியும் என்பதை இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் நன்றாக அறிந்துகொண்டே அங்கிருந்து வெளியாகி சற்று மறைந்தப் பின்னர் தனது மனைவிப் பிள்ளைக்கு நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை தன்னுடைய அறிவுக்கு எட்டும்வரை இறைவனிடம் பட்டியலிட்டுக்கேட்டார்கள்.
14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற் கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்து விட்டுத் திரும்பினார்கள்.
இந்தப் பிரார்த்தனையை செவியுற்ற அல்லாஹ் இதை அதிகப் பிரசங்கித்தனம் என்றுக்கூறவில்லை என்னுடையப் பொறுப்பில் விட்டவர்களுக்கு என்ன தேவைப்படும் என்று எனக்குத் தெரியாதா ? நீ பட்டியிலிட்டால் தான் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியாத தெல்லாம் எனக்குத் தெரியும் என்று கோபப்பட்டு பதிலளிக்கவில்லை மாறாக அவர்கள் பட்டியலிட்ட தொழுகை, சகோரத்துவம், உணவுப் போன்ற மூன்று அம்சங்களையும் குறைவின்றியே நிறைவேற்றிக் கொடுத்தான். இதன் மூலமாக நம் உள்ளம் நாடும் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை நமது நாவு; வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை இறைவனிடம் பெறவேண்டும்.
நம்முடைய குழந்தைகள் ஸாலிஹான குழந்தைகளாக வளரவேண்டும் என்று நினைத்தால் தொழுகையை குழந்தைப் பருவத்தில் புகுத்தவதுடன் புகுத்தியத் தொழுகை உள்ளத்திலிருந்து வெளியேறாமல் நிலை கொள்வதற்காகவும் அவர்களின் எதிர்கால தேவைகளாகிய உணவும், பிற மனிதர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டு சகோதர வாஞ்சையுடன் வாழ்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
தொழுவார், சகோதரத்துவம் இருக்காது, தொழுகையும் சகோதரத்தவமும் இருக்கும், பொருளாதாரம் இருக்காது பொருளாதாரத்தைத் தேடும் பொழுது சறுக்கிடுவார். இப்படி எதாவது ஒன்று அமைந்தால் மற்றொன்று அமையாததைப் பார்க்கிறோம். மூன்றும் ஒருங்கே அமையப் பெறவேண்டும் என்றால் குழந்தைகளை சிறுப்பிராயமாக இருக்கும் பொழுது மூன்றுக்கும் முதன்மையானதான தொழுகையைப் புகுத்துவதுடன் அவர்களது இதரத் தேவைகளை இறைவனினடம் பெற்றோர் கேட்க வேண்டும். மூன்றும் ஒருவருக்கு ஒருங்கே அமையப் பெற்று விட்டால் அவரின் சுவனத்தை தடை செய்ய எவராலும், எந்த சக்தியாலும் முடியாது.
இஸ்லாம் வந்தது மனித சமுதாயத்தை வழிகேட்டிலிருந்து நேர்வழியில் செலுத்துவதற்காகத் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆன் - நபிமொழி நெடுகிலும் காணப்படுவதைப் பார்க்கிறோம் அதில் ஒன்று தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடும் பிரார்த்;தனை மிகப் பெரிய சான்றாகும்.
ஏன் என்றால் ? அந்த தாம்பத்தியத்தின் மூலமாகவே குழந்தைப் பாக்கியம் அருளப்படுவதால் அங்கு ஷைத்தான் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்திலும் இறைவனின் பாதுகாவல் கொண்டு ஷைத்தானை விரட்டுவதற்காக
بِسْمِ اللَّهِ , اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ , وَجَنِّبِ الْشّيْطَانَ مَا رَزَقْتَنَا
பிஸ்மில்லாஹி, அல்லாஹூம்ம ஜன்னிப்னாஷ் ஷைத்தான, வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஜக்தனா - உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன் 'அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறி நெருங்குகிறேன். 'இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப்போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி : 141ஃ138.
நல்லதை தெரிந்துக் கொள்வதில் இஸ்லாம் நாணத்தைப் பேணச் சொல்லவில்லை, தீமையைத் தெரிந்து கொள்வதில் இஸ்லாம் வெட்கப் படச்சொன்னது.ஷைத்தான் ஒருவரை நெருங்குவதால் அவரது பொருளாதாரத்தை சரித்திடுவதில்லை, அல்லது அவரது பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதில்லை ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் வெறுக்கிறான் என்பதை அறிந்திருந்த ஷைத்தான் ஒழுக்கக்கேட்டைத் தூண்டி இறைவளை வணங்கும் சிந்தனையை மாற்றி விடுவதைத் தவிற வேறெதுவும் அவனால் செய்ய இயலாது.
ஒழுக்கங் கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் கோபம் கொள்கிறான் என்பதற்கு நூஹ் (அலை) அவர்களின் மகனை அவர்களின் கண் முன்னே அலை ஒன்றை அனுப்பி அடித்;து சென்றப் பிறகு அதைக் கண்ணுற்ற நூஹ்(அலை)அவர்கள் மனம் உடைந்து இறiவா ! இவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா ? என்று ஆதங்கத்துடன் கேட்டதற்கு அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல என்றுக்கூறி விட்டு அதற்கு அவன் ஒழுக்கங்கெட்டவன் என்ற பதிலை அல்லாஹ் அளித்தான்.
ஏகஇறைவனை மறுத்த மகனை, ஒழுக்கங்கெட்ட செயல்களில் மூழ்கித் திளைத்த மகனை கண்முன்னே நிகழ்ந்த இறைவனின் கோபத்திலிருந்து நபியாக இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. உலகில் இப்படி என்றால்? மறுமையில் இதை விட கடுமையானதாக இருக்கும். தந்தையின் கண் முன்னே மகனும், மகனின் கண் முன்னே தந்தையும் சித்ரவதை செய்யப் படுவார்கள்.
ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை தெளிவாகவே அங்கு அறியவேச் செய்வார்கள் என்பதற்கு இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் தன் தந்தையின் நிலையைக் கண்டு தவித்து இறைவனிடம் இறiவா ! மறுமையில் என்னை கண்ணியப்படுத்துவதாக நீ அளித்த வாக்குறி அளித்திருந்தாய் !
நான் மட்டும் கண்ணியமடைந்து நரகில் என் தந்தை சித்ரவதைப் படும்போது அதை என்னால் சகிக்க முடியாது என் தந்தையை மன்னித்து அவருக்கு கண்ணியத்தை வழங்கு என்றுக் கேட்க அதை இறைவன் மறுத்து அவருடைய கண் முன்பாகவே உருவத்தை மாற்றி நரகில் வீசப் பட்டது தெளிவான ஆதரமாகும்.
உலகில் மகனக்குத் தலைவலி என்றாலே தாங்கிக் கொள்ள முடியாத தாய்,தந்தையால் மறுமையில் மகனை நெருப்பால் பொசுக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியுமா ? இறுதித் தீர்ப்பு நாளின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளருவதற்காக தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் இறைவனிடம் அவர்களின் உலக – மறுமைத் தேவைகளைப் பிரார்த்திக்க வேண்டும்.
பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்தெடுத்தாலர் அது இம்மை- மறுமையில் அவர்களுக்கு மட்டும் நலவாக அமையாது, மாறாக வளர்த்தெடுக்கும் பெற்றோருக்கும் நலவாக அமைந்து விடும் வயதான காலத்தில் அன்புடனும், பரிவுடனும் பராமரிப்பார்கள், மரணித்தப் பின்னரும் கப்ரு வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும் இறைவனிடம் உள்ளம் உருகி பிரார்த்திப்பார்கள். உலகில் நற்செயல்கள் புரிந்து ஒரு மலை அளவு நன்மைகளை குவித்திருந்தாலும் மரணித்தப் பின்னர் அவர்களின் ஒழுக்கமுள்ளப் பிள்ளைகள் அவர்களுக்காக கேட்கும் துஆ மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளைப் போல் குவியக் கூடியதாக அமைந்து விடும்.
மரணத்திற்குப் பின் தன்னை ஈன்ற தாய் தந்தையரின் மறுமை வாழ்வுக்காக பிள்ளைகள் பிரார்த்திக்க வேண்டும் என்பதை அறியாமலே எத்தனையோப் பிள்ளைகள் இருக்கின்றனர் அதற்கும் காரணம் தாய், தந்தையர் தான் தொழுகையை சிறுப் பிராயத்தில் அவர்களுக்குப் புகுத்தி விட்டால் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்;ள நற்செயல்களை சிறிது,சிறிதாக கற்றறிந்து கொள்வார்கள். தாய், தந்தையார் குழந்தைகளுக்கு ஏவுவது கடமை நூஹ் நபி(அலை) அவர்களின் மகனைப்போல் ஏற்றுக் கொள்ளத் தவறி வழிக்கெட்டால் அதற்கு தாய், தந்தை பொறுப்பாகி விடமுடியாது. தொழுகையை ஏவ வேண்டும், அந்தத் தொழுகை உள்ளத்தில் பதிய இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
நன்றி : அதிரை பாரூக். (மின்மடல் வழியாக வந்த செய்தி).
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
திருக்குரானும் அறிவியல் உண்மையும்!!!

இந்தப் பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத் தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டி கள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.
இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.
இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத் தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
உயிர் காக்க உதவுங்கள்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெருவைச் சார்ந்த நிஹமதுல்லாஹ் [வயது 20] இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது. தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதி உதவி கோரியுள்ளார். நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்தால் ஒரு வாலிபர் உயிர்பிழைக்கும் வாய்ப்புள்ளது. கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யும்மாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். அன்புடன்: ஆசிரியர் - புதியதென்றல்.
A.J. Nihmathullah
A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110
Assalamualikum : My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011. As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed. But Now His Blood serum creatitine level is 20 Blood Urea is 164 . so doctor advised to immediately start the hemodayalasis process. Now we do the hemodayalasis process Also he need a dialysis process for every weekly for two times. per dialysis cost is min Rs.3000/- insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs. Make a dua for his guys. and also if u possible pls help this guy.
A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110
வியாழன், 20 ஜனவரி, 2011
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைது செய்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிக்கை.

மத்திய அரசாங்கம் 1992க்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் பங்கு உள்ளதா? என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இ.எம்.அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். பாப்புலர்ஃப்ரண்ட் கடந்த சில வருடங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் இன்னும் இவ்வழக்கில் ஏற்கெனவே போலியாக சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை இன்னும் திரும்பப்பெறவுமில்லை. அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியே விடவுமில்லை என்பது வருந்தத்தக்கது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பதை விட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை முன்பே முயற்சி செய்திருந்தால் தொடர்ச்சியாக நடைபெற்ற தீவிரவாத செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும்.அதனால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் சமூக மற்றும் தேசத்தின் நலன்கருதி ஆர்.எஸ்.எஸ்ன் ஷாகா வகுப்புகள் மற்றும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
செவ்வாய், 11 ஜனவரி, 2011
கஷ்மீர் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு.

கஷ்மீர் மக்களுக்கு அவர்கள் விரும்பும் சலுகைகளும், மரியாதையும் அளிப்பதுதான் சரியான வழிக்கான ஆரம்ப சுவடு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் திலிப் பட்காங்கர் தலைமையிலான மத்திய நடுவர்குழு கஷ்மீரின் பலதரப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது
திங்கள், 10 ஜனவரி, 2011
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் தமிழ் மாநில மாநாடு.
மாணவர் சமூகம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான பாதையில் ஒதுக்கித்தள்ள முடியாத சக்தியாகும். சமூக மாற்றத்திலும், தேசத்தின் வளர்ச்சியிலும் உறுதிப்பூண்டு மாணவர்களை வழி நடத்தவேண்டும் என்பதுதான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியம் என தலைவர்கள் தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் எ.ஷாஹுல் ஹமீத், துணைத் தலைவர் எ.முஹம்மது அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)