வியாழன், 9 செப்டம்பர், 2010

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

அன்புள்ள வாசகர்களுக்கு  இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் இறைவனை சந்தியும், சமாதானமும் எல்லோர்மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்த்தித்து கொள்கிறேன்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

மறைவான வணக்கம்

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
    இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
    நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
    ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
    உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
    நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
    அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
    மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
    இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
    சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
    இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
    யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
    அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
    செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

    நோன்பாளி செய்யக் கூடாதவை
    எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல்  பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

    நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"  என்று  கூறி விடவும். நபி (ஸல்)  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

    நோன்பின் தற்காலிக சலுகைகள்
    நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.  (அல்குர்ஆன்: 2:185)

     எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

    அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு  நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்  கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்  பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.  நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

    நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
    நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்  வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

    நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ  செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான்.  நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

    சஹர் செய்தல் 
    நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

    ஒரு ரமழானில் சஹர்  உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

    நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

    நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

திங்கள், 5 ஜூலை, 2010

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

   ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


மாணவன் பெயர்:அஹமது
தந்தை பெயர்:        ஷேய்க் அப்துல்லா
தாய் பெயர்:           சகர் பானு
படிப்பு:                     12th standard
வயது                      18
மதிப்பெண்            962
அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.

மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.

இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.

அந்த மாணவனின் தொடர்பு முகவரி
 S.AHAMAD
29/12 GODOWN STREET,
ADIRAMPATTINAM
CONTACT # 9843535710

தகவல் உதவி :அப்துல் ரஜாக்
கலிபோர்னியா

ஞாயிறு, 4 ஜூலை, 2010

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய விருத்தாசலத்தை சேர்ந்த ராஜா.

கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மது என்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” உருவம் இல்லா ஒரு கடவுள் மட்டுமே என்ற தத்துவம் மேலும் அக்கடவுளை வணங்கும் முறை , இவைகள் தன்னுள்ளத்தை ஈர்த்ததாகவும் கூறினார். அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.

வியாழன், 1 ஜூலை, 2010

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய.

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(F)ள்(க்)கல் அளீம். ப(F)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(F) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B)(த்)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B)ரிக் லீ பீ(F)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(F) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B)(த்)தி அம் ரீ வ ஆஜிஹி ப(F)ஸ்ரிப்(F)ஹு அன்னீ வஸ்ரிப்(F)னீ அன்ஹு வக்துர் யல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ

இதன் பொருள் :

இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.

இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!

இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

சனி, 26 ஜூன், 2010

கலிபோர்னியாவில் பெண்கள் பயான்

கலிபோர்னியாவில் பெண்கள் பயான் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிச்மாண்ட் என்ற ஊரில் உள்ள பெரிய மர்கசில் வெள்ளி,சனி,ஞாயிறு என தொடர்ந்து தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்று வருகிறது.

அதுபோது,அமெர்க்கா,கனடா மற்றும் உலகின் பல முனைகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.அதுபோல இந்தியாவின் பல மாநிலங்கள்,தமிழகம் போன்ற இடங்களிலிருந்தும் மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் சார்பாக குறிப்பாக புரொபசர் அப்துல் ரஹ்மான்(70) அவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


புரொபசர் அப்துல் ரஹ்மான் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர் சொன்னார்,"அட அதிராம்பட்டினமா?நம்ம அப்துல் காதர் ஆலிம்சா ஊராச்சே.தங்கமான மனிதரைக் கொண்ட ஊரல்லவா அது?"என்றார்.மேலும் கூறுகையில்,சில மாதங்கள் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம்.அங்கு அதிரையை சேர்ந்த சகோதரர்களை சந்தித்தோம்.அவர்கள் பெண்கள் பயானுக்கு ஏற்பாடு செய்து,அது மூலம் பலர் பயன்பெற்றனர்.இங்கும் நீங்கள் ஏற்பாடு செய்தால்,பேசுவோமே?என்றாகள்.



இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் செய்வோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

அல்லாஹ்வின் கிருபையினால்,அதிரையை சேர்ந்த சகோதரர் ஷிப்லி அவர்கள் தங்கள் வீட்டில்( சாக்ரமண்டோ )பயானை வைத்துக்கொள்ளலாம் என மனமுவந்து ஒத்துக்கொண்டார்கள்.

எனவே இன்ஷா அல்லாஹ்,ஞாயிறு (06.27.10)அன்று சாக்ரமண்டோ மஸ்ஜித் அந்நூர் பள்ளிவாசலில் அசர் தொழுகை முடிந்தவுடன்,சகோ ஷிப்லி அவர்களின் வீட்டில் பயான் தொடங்கி,மக்ரிப் நேரம் வரை நடை பெரும்.

 எனவே அதிரையை சேர்ந்த சகோதரர்கள் மட்டுமின்றி தமிழ் மொழி பேசும் எல்லா ஆண்களும்,பெண்களும் வந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.மேலும் உருது,ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


இடம் மற்றும் ரூட் போன்ற விவரங்கள் அறிய சகோ ஷிப்லி அவர்களை தொடர்பு கொள்ளவும்.

BROTHER SHIBLI 916 473 3593

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் பாவங்களையும் மன்னிப்பானாக.ஆமீன் 

நிகழ்ச்சி ஏற்பாடு மதுரை சலீம்,அதிரை ஷிப்லி

வெள்ளி, 4 ஜூன், 2010

அல்லாஹ்வின் வல்லமை,ஏகனை ஏற்பது எப்போது?

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
  
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.
 
சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
 
சூராவளிடொர்னடோ எவ்வாறு உருவாகிறது
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.
 
இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.
 
இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
 
இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.
 

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.
 

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
 
FIREWHIRLS
நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.
 
அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே
 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 
 
 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

BY MOHAMED YOUSUF ALI
    PHILADELPHIA USA 

வியாழன், 13 மே, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? சு. ராஜேஸ்வரன்.

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன். திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர்.

இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார்.’மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது.மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்:சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கஃபாவின் சிறப்புகள் ஒரு வரலாற்று பார்வை.


அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.

'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம். உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம்: மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும். அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96) 'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது. எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை: மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்), நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) (திர்மிதீ 3860). மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

அபய பூமி: மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57) அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான். நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126) அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது. மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு: 'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும். அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5) மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: (புகாரி 2118)

இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது. கொலை, போர் செய்தல் கூடாது நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில: அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான். (ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி 6882)

காஃபிர்கள் நுழைவதற்குத் தடை: இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) (புகாரி 1622)

பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது. ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.

இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்: இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.
புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189
மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

அளவற்ற நன்மை : 'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.
என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) (புகாரி 1190) ''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, (அஹ்மத் 14167).

எந்நேரமும் வழிபடலாம் : நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது. ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள். ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)(திர்மிதீ 795). தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு : இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236

கஅபா இடிக்கப்படுதல்: கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள். இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896

''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595. கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.

நல்லுணர்வு பெறுவோம்: இப்னு உமர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.(புகாரி 1742). இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

தினமும் ஓத வேண்டிய துஆ


பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஆதாரம்: புகாரி 3293

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல் ஷையின் கதீர்.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

நபி (ஸல்) அவர்களின் இறுதி உரை: இஸ்லாத்தின் பத்து கட்டளைகள்.


1417 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? 'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!! இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா!நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன்,முஹம்மது ரஸூலுல்லாஹ்.

திங்கள், 5 ஏப்ரல், 2010

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் டீ-சர்ட் அணிந்து விளையாட மறுப்பு.


புதுடெல்லி:இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக விளங்குபவர் யூசுஃப் பதான். தற்ப்பொழுது ஐ.பி.எல் டுவெண்டி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதமடித்தவர் யூசுஃப் பதான்.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியின் பொழுது மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் சின்னம்(லோகோ) உடைய டீ-சர்ட் அணிய மறுத்துவிட்டார். இதுத் தொடர்பாக யூசுஃப் பதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "கிங்ஃபிஷர் ஆல்கஹால்(மதுபானம்) தயாரிக்கும் நிறுவனமாகும். மதுபானத்தை அருந்துவதோ அல்லது அதன் விற்பனைக்குத் தூண்டுவதான விளம்பரத்தில் பங்கேற்பதோ எனது சொந்த மத நம்பிக்கைக்கு எதிரானது" என்றார் அவர்.

பரோடாவில் உள்ள மஸ்ஜிதில் தனது இளைமை பருவத்தில் வளர்ந்த இவருடைய தந்தை முஅத்தினாக(மஸ்ஜிதில் அதான் கூறுபவர்) பணிபுரிந்து வருகிறார்.
இதுத் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இது ஒரு சிறிய விஷயம். இது அவருடைய சொந்த விருப்பம். அவர் நன்றாக பேட் செய்கிறார். அணி நிர்வாகம் அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது" என்றார்.

இதற்கு முன் இத்தகையதொரு முடிவை தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரான ஹாஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நீண்டநாள் ஸ்பான்சராக செயல்பட்டுவரும் பீர் கம்பெனியான கேசில் லேகர் என்ற நிறுவனத்தின் டீ சர்ட்டை அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்பிரிக்க அணியும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 24 மார்ச், 2010

கற்சிலை (ஹிந்து கடவுள்) காளிக்கு 3 மகளைக் கொன்று பலி கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப ஹிந்து தந்தை.

இஸ்லாமாபாத்,​​ மார்ச் 24:​ பெண் கற்சிலை (ஹிந்து கடவுள்) காளிக்கு பலி கொடுப்பதாக தனது 3 மகள்களையும் கொன்று தற்கொலை செய்து கொண்டார் பாகிஸ்தானை சேர்ந்த பெமோமல் என்பவர்.இதுகுறித்து அந்நாட்டு போலீஸôர் கூறியது:​ சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பெமோமல் ​(26).​ காளி பெண் கற்சிலை(ஹிந்து கடவுள்)மீது கண்மூடித்தனமான பக்தி உடையவர்.​தன் வீட்டின் முதல் தளத்திலேயே காளி கோயிலை நிறுவி வழிபட்டு வந்தார்.

​இந்நிலையில் புதன்கிழமை காலை எழுந்த பெமோமல் குளித்துவிட்டு தனது தாயாரை சந்தித்துள்ளார்.​பின்னர் தனது வீட்டில் உள்ள காளி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.​ பின்னர் கீழே இறங்கி வந்து தனது மகள்கள் பார்வதி ​(6),​ ரேணா ​(4),​ ஆர்த்தி ​(1 )​ ஆகிய 3 பேரையும் திடீரென தொண்டையை நெரித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.​ அடுத்த சில நிமிடத்தில் தன்னைத் தானே தொண்டையை நெரித்து தற்கொலை செய்து கொண்டார்.​ பெமோமல் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.​

வெளியே சென்றிருந்த பெமோமல் மனைவி திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது தனது கணவரும்,​​ 3 மகள்களும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.​ செய்வறியாது கதறி அழுதுள்ளார்.​​அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தாரும் 4 பேர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.​ அவர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தனர்.​இதையடுத்து நாங்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பெமோலே கற்சிலை காளி (ஹிந்து கடவுள்) தனது மகள்களை கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது என்று சிந்து மாகாண போலீஸôர் தெரிவித்தார்.

சிந்திக்க: நம்மை படைத்த கடவுள் எந்த தேவையும் அற்றவன். ஹிந்துக்கள் கடவுள் என்று தங்கள் கைகளால் செய்து வைத்த கற்சிலைகளை வணங்குவது பெரிய மூடத்தனம். இதை அவர்கள் என்று உணர்வார்களோ? அவர்கள் திருந்தவும் ஒரு இறைவனை வழிபடவும் நாம் பிரார்த்திப்போம்.ஹிந்து மதத்தில் முன் இருந்த துறவிகள் காடுகளில் போகி உருவ மற்ற இறைவனை தான் தவம் செய்துள்ளார்கள். இந்த உருவ வழிபாடு பிராமண புரோகிதர்களால் உண்டாக்க பட்டது. இதை புரிந்து துய இஸ்லாத்தை ஏற்பார்களா?

திங்கள், 22 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம் ஒரு ஆய்வு.


உலகம் முழுவதும் தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான தண்ணீர் தின முழக்கமாக "ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்" என அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கத் துவங்கி பல்வேறு தலைப்புகளில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த முழக்கங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு தண்ணீரைக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் தன்னார்வலர்களும் ஐ.நாவின் துணை அமைப்புகளின் பணியாளர்களும் உலக முழுவதும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். ஆண்டுக்கொரு முறை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபடுவதிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடைபிடிப்பதிலோ எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஏனெனில் ஆண்டுதோறும் தண்ணீர் தேவையின் அதிகரிப்பு ஒரு புறம் அதிகரிக்கும் சூழலில் தூய்மையான தண்ணீரின் தட்டுப்பாடும் அதிகரிக்கவேச் செய்கின்றது.

பூமி பரப்பில் நீரின் இருப்பு 97 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது. தண்ணீரின் பயன்பாடு மற்றும் தூய்மையை பாதுகாத்தல் போன்றவற்றில் நாடுகளை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் அதி முக்கியத்துவம் அளித்தாலன்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவியலாது என்பதுதான் உண்மை. மனித சமூகம் ஏற்படுத்தும் கெடுதிகளால் இன்று தண்ணீரின் தன்மை மாசுபட்டு மனித சமூகம் பெரும் அபாயத்தை நோக்கி நிற்கிறது.

நீர் நிலைகளையும், குளங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் ஏற்பட்ட உவகை இன்று எங்கே போனது? கரை புரண்டு தண்ணீர் ஓடும் நதிகளை பார்ப்பது அரிதாக மாறிவருகிறது. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. வருங்காலம் தண்ணீருக்காக மனித இனம் போராட போகும் காலம். போராட்டத்தின் சிறு பகுதியை கொஞ்ச காலமாகவே தமிழகம் காவிரி மற்றும் முல்லைப் பெரியார் பங்கீட்டில் அனுபவித்து வருகிறது. எவ்வளவு பொருள், உயிர் இழப்பு, பரஸ்பரம் வெறுப்பு, வேலை நிறுத்தம், நீதிமன்றம், சட்டம் என மனித உழைப்பு வீணாவது என்று கணக்கிட்டால் ரூபாய் மதிப்பில் பல கோடிகளைத் தாண்டும்.

தண்ணீருக்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அல்லலுறும் பொழுது இன்னொரு பகுதி தண்ணீரை விரையம் செய்வதிலும், மாசுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கொடுமை நிகழ்ந்தேறுகிறது. பணக்கார நாடுகள் எந்தவொரு பொறுப்புணர்ச்சியின்றி கழிவுகளை ஆப்பிரிக்க கடல் பகுதிகளில் கொட்டி அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பினால் கொதிப்படைந்த ஒருபிரிவினர் இன்று சோமாலியா கொள்ளையர்களாக மாறிவிட்டனர்.கடல்,ஆறு,குளம், குட்டை,கிணறு என எல்லாவிதத் தண்ணீர் நிலைகளும் மாசுபடுத்தப்பட்டே வருகின்றன. தண்ணீர் மனிதனைப் படைத்த வல்ல இறைவனின் அருட்கொடைகளில் மகத்தானது.

இறைவன் கூறுகிறான்: "உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11),
(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்.(அல்ஃபுர்கான், 25:48)

இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனித சமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனது அருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபான வகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. தண்ணி பார்ட்டி, தண்ணி போட்டிருக்கான் என்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாக பயன்படுத்தும் அவல நிலையை நாம் காணத்தான் செய்கிறோம்.

நமது இந்திய தேசம் உலகின் இரண்டாவது, மக்கள் தொகை அதிகமான நாடு. ஆனால் இங்கே 200 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இது அமெரிக்க மக்கள் தொகையை விட 2 1/2 மடங்கு அதிகம். இந்தியாவில் பரவும் தொற்றுநோய்களில் 21% தண்ணீர் மூலம் பரவுபவை. ஆண்டுதோறும் டயோரியா நோயால் மட்டும் 7,00,000 இந்தியர்கள் இறக்கின்றனர். ஆய்வுகள் கூறும் உண்மைகள் இவை.நம் நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபட்டு கொண்டிருக்கும் அவலங்கள் நமக்கே தெரியும். இந்த 50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள், இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல் , நேரிடையாக கலப்பதால், நீர்நிலைகளும், வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால் நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.

இந்தியா அழகான பல நதிகள் நிறைந்த நாடு. நதிகளை தாயாய் தெய்வமாய் போற்றுவதாக ஒரு மதத்தவர் கூறுகின்றனர். ஆனால் மதத்தின் பெயரால் தண்ணீரை மாசுபடுத்தி அழுக்கு நீராக்கும் பணியைத்தான் அவர்களில் ஒருசாரார் செய்து வருகின்றனர். இந்தியாவின் அதிமுக்கிய நதியான கங்கையின் இன்றைய நிலை என்ன? உலகின் மிக அழுக்கான நதிகளில் ஒன்றாக மாறிவிட்டது. கங்கா ஜலம் என்றால் புனிதம் என்றார்கள் ஆனால் புனிதம் என்பது போய், குளித்தால் தோல் நோய்கள் வரும் அளவுக்கு தகுதியற்றது ஆகிவிட்டது. இரசாயன கழிவுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், அதிக அளவு சுற்றுலா பயணிகள் உபயோகித்தல், இவை போதாதென்று, இறந்தவர்களின் சடலங்களை `ஜலசமாதி’ செய்யும் மூடநம்பிக்கைகள், இவை அனைத்தும் சேர்ந்து ஒரு அழகான நதியை அழுக்காக்கி விட்டது. யமுனை உள்ளிட்ட பல நதிகளுக்கும் இதே கதிதான்.

விநாயகர் சிலை விஜர்சனம் என்ற பெயரில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்ற உலோக கலவையால் செய்யப்பட்ட சிலைகளை கடலில் கரைத்து அதன்மூலம் கடலில் வாழும் மீன்களுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் நாசத்தை விளைவிக்கின்றனர் ஒரு சாரார். ஆனால் அரசோ இதனையெல்லாம் கண்டும் காணாமல் உள்ளது. ஒரு புறம் மதவாதிகளால் என்றால் இன்னொருபுறம் மத்தியில் ஆளும் அரசுகளின் உலகமயமாக்கல் போன்ற இறையாண்மைக்கு உலைவைக்கும் கொள்கைகளால் தண்ணீரின் தன்மை மாசுபடுத்தப்பட்டு வருகிறது.

நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம், நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம். அதிக பயன்பாடு, போதிய மழையின்மை, இவற்றோடு` கோகோ கோலா போன்ற ஏகாதிபத்திய அந்நிய நாட்டு கம்பெனிகளும் நிலத்தடி நீர்வறட்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கம்பெனிக்கு இந்தியா முழுமையும், 52 பாட்டிலிங் மையங்கள் உள்ளன.

கேரளாவில் இதன் காரணமாகவே,`பிளாச்சிமேடு’என்னும் கிராமம் நிலத்தடி நீரையிழந்து விட்டதும், அங்கு டிரக்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்க படும் அவலமும் தெரிய வந்துள்ளது. `கோக் குடிப்பது ஒரு இந்திய விவசாயியின் இரத்தத்தை குடிப்பதற்கு ஒப்பானது’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், விற்பனை அமோகமாக தான் உள்ளது.

இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் அறிவியல் மையம், கோக், பெப்சி முதலான மென் பானங்களை பரிசோதித்த பின் வெளியிட்ட தகவல்,'இவை மூன்று அல்லது ஐந்து வகை பூச்சிகொல்லிகள் கலந்த காக்டெய்ல்' என்பது தான். அவ்வப்போது கரப்பான், பல்லி இவற்றின் உடல்களை பாதுகாக்கும் ஃபார்மலின் திரவமாகவும் செயல் படுகிறது. பத்து நாட்கள் சர்ச்சைகள், அடங்கியபின், மறுபடி விற்பனை முன்னைப் போலவே...

கேடு பயக்கும் என தெரிந்தும், இதன் கவர்ச்சி விளம்பரங்களில் மயங்கி நாமும் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு இணையான, நம் நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த நாம் தயங்குவதால் உள்நாட்டு குளிர்பானக் கம்பெனிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படுகின்ற அவல நிலையும் நிகழ்கிறது. எனவே இதுத்தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமது சுற்றுப்புற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவும், அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு நமது தண்ணீரை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு எதிராகவும் போராட முன்வரவேண்டும். நமது தேவை போக மீதமான தண்ணீரை பிறருக்கு கொடுக்கும் மனோநிலையும் நமக்கு வரவேண்டும். இத்தகையதொரு மாற்றம் வராமல் தண்ணீருக்காக கண்ணீர் சிந்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் (இறைவன்) நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)

சனி, 13 மார்ச், 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.


கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010
Read more...

வியாழன், 11 மார்ச், 2010

போலி சாமியார்கள்

.......ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். 6:119
-------------------------------------------------------------------------------------

அறிவுச் சுடராம் அண்ணலெம் பெருமானார்(ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் நிலவும் அறியாமையை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டார்கள்.

மக்காவின் புனித இறை இல்லம் கஃபாவில் இணைவைப்பாளர்களால் நிருவப்பட்டிருந்த 360க்கும் மேற்பட்ட சிலைகளில் சில பிரபலமான சிலைகளுக்கு மக்காவிற்கு வெளியிலும் கிளை கோயில்கள் நிருவப்பட்டிருந்தன.

அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பின் கீழுள்ளவர்கள் ஏறத்தாழ இன்றைய இந்தியாவின் உயர்ஜாதி பரமஹம்ஸ வகையறாக்கள் போலவே அன்றைய அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவைகள் உங்களை இறைவனிடம் நெருக்கி வைக்கும் ஆற்றல் படைத்தவைகள் என்றும், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜோதிடம், மற்றும் சகுனம் போன்ற அனைத்து வழிகளிலும் அவர்களை ஏமாற்றி எத்திப் பிழைத்து வந்தனர்.

Ø ஏகஇறைவன் ஒருவனே,

Ø அவனிடத்தில் யாரும் யாருக்கும் பரிந்துப் பேச முடியாது,

Ø யாரும் யாருடைய எதிர் காலத்தையும் கணித்துக் கூற முடியாது,

Ø இறைவனின் நாட்டத்தில் நடக்கவிருப்பதை சகுனத்தின் மூலம் தடுத்துக் கொள்ள முடியாது.

என்ற நபிகளாரின் ஏகத்தவ முழக்கம் மக்கமா நகரில் முழங்கத் தொடங்கிய பொழுது அது அன்றைய உயர் ஜாதி வகையறாக்களின் செவிப்பறைகளை கிழிக்கும் இடி முழக்கமாகியது. அதனால் அவர்கள் தங்களது செவிகளுக்குள் விரல்களை நுழைத்துக் கொண்டதுடன் பொதுமக்களையும் அவ்வாறே ஏவினர்.

ஏகத்துவ முழக்கம் தங்களது பிழைப்பின் மீதும், உயர் ஜாதி அந்தஸ்த்தின் மீதும் விழுந்த சவுக்கடியாக கருதிய ஏமாற்றுப் பேர்வழிகள் இறைத்தூதரையும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களையும் இரும்புக் கரம் கொண்டு எதிர்த்தனர்

அவர்களின் கடுமையான எதிர்ப்புகளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு தங்களின் அறிவுக் கூர்மையால் எதிர்கொண்டார்கள், எதிர்த்தவர்களையே ஏகத்துவததையும் ஏற்கச் செய்து அவர்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரேக் கோட்டின் கீழ் நிற்கச் செய்தார்கள்.

Ø மனிதர்கள் அனைவரும் சமம்,

Ø மனிதர்கள் புனிதர்கள் அல்ல,

Ø மனிதர்களில் யாரும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் அல்ல,

என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள் அதனால் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் அரேபிய தீபகற்பத்தில் மனிதர்களில் யாரும் யாருக்கும் தெய்வீகத்தன்மை இருப்பதாக கருதி தனி மரியாதை செலுத்த முன்வர வில்லை.

Ø அவர்களில் யாரும் யாருக்கும் தனி மரியாதை செலுத்த முன்வராத காரணத்தால்

Ø அவர்களில் ஜோதிட நிபுனர்கள் உருவாக வில்லை,

Ø அவர்களில் அருள்வாக்குக் கூறும் போலி ஆசாமிகள் உருவாகவில்லை,

Ø அவர்கள் பெயரால் ஆஸ்ரமங்களும், யாகசாலைகளும் நிருவப்;படவில்லை.

இன்றைய இந்தியாவின் நிலை.

அருளாசியும், அருள்வாக்கும் வழங்கிக் கொண்டு ஏராளமான பக்தகோடிகளைக் கொண்ட உயிருடன் வாழும் சாய்பாபாவின் பெயரில் டெல்லி மற்றும் பல மாநிலங்களில் சிவ்முரத்தி வேதி என்ற போலி சாமியாரால் அமைக்கப்பட்ட ஆஸ்ரமங்களில் உலகிலேயே அதிக ரேட்டில் விபச்சாரம் நடந்து கொண்டிருந்ததை அவரது ஞானக் கண்களால் (?) காண முடியவில்லை.

சாய்பாபாவிடம் இறையருள் இருப்பது உண்மை என்றால் அவர் பெயரால் அரவது பக்தன் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்ரமத்தில் நடந்து கொண்டிருக்கும் விஐபி விபச்சாரத்தை எனது ஞானக் கண்களால் கண்டேன் பக்தர்களே ஓடுங்கள் அந்த ஆஸ்ரமங்களை அடித்து நொறுக்குங்கள் அவனைப் படித்து சங்கிலியால் பிணைத்து இழுத்து வாருங்கள் என்று சொல்லி இருப்பார்.

அவரிடம் இறையருள் இல்லை, எவரிடமும் இருக்காது அவரும் ஒரு டுபாகூர் என்பதற்கு இதையாவது உதாரணமாக எடுத்துக்கொண்டு சாய்பாபா பக்தர்கள் அவரை விட்டு விலகுவார்களா? என்றுப்பார்ப்போம்.

உத்தரப்பிரதேசத்தில் கிரிபாலு மஹாராஜ் என்ற சாமியாரின் ஆஸ்ரமத்தில் இரண்டு தினங்களுக்கு முன் கூட்ட நெரிசலில் 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் தலைவர் கிரிபாலு மஹாராஜ் 1997ல் பாலியல் வழக்கிலும், நிலமோசடி வழக்கிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சாமியார்களை நம்பக் கூடாது என்பது வேறு விஷயம் சாமியார்களுக்கு இன்னத் தகுதியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாத அப்பாவி மக்களாக இருப்பதாலேயே போலி சாமியார்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. இவருக்கும் வெளிநாடுகளில் ஏராளமான ஆஸ்ரமங்கள் இருக்கின்றனவாம் ?

திருவண்ணாமலை ராஜசேகர் பிறந்து 10 வது நாளில் எதிர்காலத்தில் பிரபல ஆன்மீக சாமியாராக வருவார் என்று ஜோதிடன் கணித்துக் கூறியதைக் கேட்ட அவருடைய பெற்றோர் அவரை சாமியார் ஃபீல்டில் திணித்து சந்நியாஸம், துறவரம், அருள் வாக்குக் கூறும் கலைகளை கற்கச்செய்து பால்குடிப் பருவத்தில் காவி உடையையும், ருத்ராட்ச மாலையையும் மாட்டிவிட்டனர். பால்குடிப் பருவம் மாறி பாலுணர்வுப் பருவம் வந்ததும் காவி உடையுடனும், ருத்ராட்ச மாலையுடனம் ரஞ்சிதாவிடம் தஞ்சம் புகுந்து விட்டார்.

ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்து விட்டது. இதையாவது உதாரணமாக எடுத்துக் கொண்டு ஜோதிடத்தை நம்பி எதிர்காலத்தை தொலைக்கும் மக்கள் அதிலிருந்து விலகுவார்களா ? என்றுப் பார்ப்போம்.

எதிர்பாராமல் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரர், தேவநாதன், நித்யானந்தன் அல்லாத இன்னுமுள்ள சாமியார்கள், துறவிகள், திருமனம் செய்யாத வாஜ்பாய் ராமகோபாலன் வரையிலான பிரம்மச்சாரிகள் அனைவரையும் ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினால் ஒருவர் கூட தேற மாட்டார்கள்,தேற முடியாது.

ஆரிய பத்திரிகை தர்மம்:

சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விஷயங்களை நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் தினம் ஒரு இல்லாத தகவலை கிரியேட் செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவாள்கள் நடத்தும் பத்திரிகைகள் நித்யானந்தா மேட்டரில் கழுவிய மீனாய் நழுவியது.

முதல் நாள் நித்யானந்தா ஆஸ்ரமம் சூறை என்று மட்டும் தகவலை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் அதை கிராஃபிக்ஸ் என்றும், தொழில் நுட்பம் என்றும், சதித் திட்டம் என்றும், அதை மறுத்ததை பரபரப்புப் பேட்டி என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.

ஏற்கனவே புவனேஸ்வரி விஷயத்தில் செய்தி வெளியிட்டு நடிகர், நடிகைகளின் கடுமையான கோபத்திற்கு உள்ளான தினமலர் மட்டும் நடிகர், நடிகைகளுக்கும், நடிகர் சங்கத்திற்கும் பதிலடியாக இதைப் பிரசுரித்திருந்தது.

சன் குழுமத்தினர் மட்டும் தினகரன் செய்தித் தாளிலும், சன் தொலைகாட்சியிலும் ஃப்ளாஸ் நியூஸாக வெளியிட்டது.

இன்றைய இந்தியாவின் தேவை.

ஆஸ்ரமங்களில் இறையருள் இல்லை என்பதை அறிந்த கேடிகள் இந்தியாவின் கோடான கோடி அப்பாவி இந்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடி, கோடியாய் பணம் பண்ணுவதற்காக சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்து அவற்றை உல்லாச பீடங்களாக மாற்றுகின்றனர்.

எப்பொழுதாவது ஒன்றிரண்டுப் பேர் மட்டுமே அதுவும் உடன் இருப்பவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக காட்டிக் கொடுக்கப்பட்டு சிக்குகின்றனர். பொதுமக்களால், அல்லது போலீஸால் அதிகம் இவர்கள் சிக்குவதில்லை.

காட்டிக் கொடுக்கும் ஒன்றிரண்டுப் பேர்களையும் கூட நிரபராதிகளாக்கி விடுவதற்கு வாதத் திறமை வாய்ந்த வக்கீல் தொழிலாளர்கள் வீதி தோறும் மலிந்து கிடக்கின்றனர்.

உதாரணத்திற்கு கொலை, மற்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் இன்னும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை பிரேமானந்தா போல் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்து விட்டாலும் கூட சிறையில் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் வேறு ஒரு வாசல் வழியாக கிடைத்துக் கொண்டிருக்கும்.

அதுவும் அண்ணா, அல்லது காமராஜர் போன்ற பெருந் தலைகள் பிறந்த நிணைவு நாட்களில் அரசே அவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து விடும். வெளியில் வந்து வேறொரு ஸ்டேட்டில் வேறொருப் பெயரில் ஆஸ்ரமம் திறந்து விடுவார்கள்.

Ø இதுவரை ஆன்மீகப் பெயரால் நிருவப்பட்டுள்ள ஆஸ்ரமங்கள், யாகசாலைகள், மடங்கள், பீடங்கள், அனைத்தும் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்.

Ø இனிவரும் காலங்களிலும் அவைகள் நிருவப்படாதவாறு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

Ø இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்கிய போலி ஆசாமிகளுக்கு மக்களின் வரிப் பணத்தில் சுகாதார உணவு வழங்கப்படாமல் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

Ø உலகிலேயே கடவுள் பக்தியாளர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதால் அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு சரியான கடவுளையும், அந்தக் கடவுளின் தன்மைகளையும் எடுத்துக் கூறி போலி சாமியார்களின் சுரண்டலிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.

ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு அரசு தரப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டால் அனைத்து பட்டி, தொட்டிகளுக்கும் சென்று சரியான கடவுள் கொள்கைகளை போதித்து நாடாளுவோரையும், நாட்டு மக்களையும் கீழ்காணுமாறு பிறரை ஏமாற்றாதவர்களாகவும், பிறரால் ஏமாறாதவர்களகவும் மாற்றிக் காட்ட முடியும்.

அபூபக்ர்(ரலி) அவர்களின் பணியாள் ஒரு நாள் ஏதோ ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து விட்டு இதை நான் எவ்வாறுப் பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார் அதற்கவர்கள் தெரியாது என்றுக் கூற 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை ஏமாற்றி வந்தேன். அதற்காக அவர் எனக்குக் கூலியாகக் கொடுத்ததிலிருந்து தான் நீங்கள் இப்பொழுது உண்டது என்றுக்கூறினார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் தம் கையை வாய்க்குள் நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள். ஆதார நூல்: புகாரி 3842. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.

வயிற்றுக்குள் போனதை விட்டு விடுவோம் இனிவரும் காலங்களில் சரியானதை விசாரித்து உண்டு கொள்வோம் என்றில்லாமல் ஒரு அப்பாவியிடம் குறி சொல்லி ஏமாற்றிய வருவாயில் அறியாமல் வயிற்றுக்குள் போனதை உடனே வாயினுள் விரலை விட்டு வாந்தி எடுத்து கக்கிய சமுதாயம் பெருமானார் உருவாக்கிய சமுதாயத்தைத் தவிற வேறொன்றை இதுவரை உலகம் கண்டதில்லை.

மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக்களை போலி சாமியார்களின் கடும் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது.

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

புதன், 3 மார்ச், 2010

பெண் சிசுவதை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை.

பெண் சிசுவதை என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்து விட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.. (அல் குர்ஆன்: 82: 8,9)

இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த இஸ்லாமியச் சமூகமக்கள் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டிற்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த கொடூரமான கொலை பாதகச் செயலைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.

அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறி, தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி கால முழுவதும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

பெண்ணுரிமை போற்றிய பெருமானார்(ஸல்) அவர்கள்

பெண் குலத்திற்கு பெருமைச் சேர்த்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? என்று எதிர்பார்த்து வாழும் நிலைக்கு பெண்களின் புகழை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள். அரபு மொழி பேசும் இஸ்லாமிய நாடுகளில் பெண்குழந்தையை பெருமைபடுத்தும் காட்சிகளை, தனக்கு பெண் குழந்தை பிறப்பதை பெருமையாக கருதும் நிலையை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த உயர் நிலை அவர்களிடையே எவ்வாறு ஏற்பட்டது? பெண்ணினத்தை மதிக்க அந்த மக்களுக்கு கற்றுத்தந்தது எது? அந்த அறியாமைக் காலத்து மக்கள் மிகக்குறைந்த நாட்களில் மனம் மாற்றம் அடைவதற்கு எது காரணமாக அமைந்தது? அதற்கெல்லாம் பின் வரும் நபி மொழி பதிலாக அமைகிறது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு கொடுக்க என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே, அதனை இரண்டாக பங்கிட்டு தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள். நூல்: புஹாரி

இந்த நபிமொழியைக் கேட்ட ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? அதனை மனம் நோகாமல் சீராட்டி, சிறப்பாக வளர்க்க வேண்டும், அதற்கு பரிசாக இறைவனிடத்தில் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரவு பகலாக கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். பெண் குலத்தின் பெருமைக்கும், சிறப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள பின் வரும் இன்னொரு நபி மொழியைப் பாருங்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது குடும்பத்திற்கு (மனைவிக்கு) சிறந்தவனாக விளங்குகிறாரோ அவரே சிறந்தவராவார். எனது குடும்பத்திற்கு நான் சிறந்தவனாக விளங்குகிறேன். (நூல்) திர்மிதி, இப்னு ஹிப்பான்.

இந்த நபிமொழியில் ஒரு ஆண்மகன் சிறந்தவனாக கருதப்படுவதற்கு அளவுகோலாக தனது மனைவியிடத்தில் நல்ல நடைமுறை கடைபிடித்து, அவளின் மதிப்பிற்குரிய சிறப்பான கணவனாக திகழவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு ஆறாத மனவேதனை தரும் சிசுவதை செய்வதற்கு அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட எந்த ஆண் மகன் துணிவான்? சிந்தித்துப் பாருங்கள். .

பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து, தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அதனால் பிஞ்சு குழந்தைகளை கொல்லும் பாவிகள் மனம் திருந்தி தூய மார்க்கமாகிய இஸ்லாத்தை அறிந்து தங்களை தூய்மை படுத்திக்கொள்ளவும், மறுமையில் இறைவனிடம் வெற்றி பெற்றவர்களாக ஆகா, இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள, வல்ல இறைவனிடம் துவா செய்வோம் ஆமீன்.